வருவாய்த்துறையினர் காரை சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்
வருவாய்த்துறையினர் காரை சிறை பிடித்த ஊர் பொதுமக்கள்
திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த விஷமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாதனவலசை கிராம பகுதியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுற்றுச்சுவர் அமைக்க அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து கட்டுமான பணியை துவக்கினர். அதில் ஒரு சிலர் சாலை போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் அரசுக்கு சொந்தமான இடம் என்று வருவாய் துறைக்கு தகவல் அளித்தனர்.
வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்றும் இங்கு சுற்று சுவர் அமைக்க கூடாது என்றும் கூறினர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வருவாய் துறையினர் காரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக வருவாய் துறையினர் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வருவாய்த்துறை என மீட்டு சென்றனர்.