புதுப்பையில் வட்டாட்சியரை சிறைபிடித்த மக்கள்

புதுப்பையில் வட்டாட்சியரை சிறைபிடித்த மக்கள்

வட்டாச்சியரை சிறைப்பிடித்த மக்கள்

புதுப்பை அமராவதி ஆற்றில் முறைகேடாக கிணறு அமைத்து மூலனூருக்கு குடிநீர் எடுத்ததை தொடர்ந்து புதுப்பை பகுதி பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியளி சிறை பிடித்து ஆற்றில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பையில் பாயக்கூடிய அமராவதி ஆற்றில் முறைகேடாக கிணறு அமைத்து தாராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட மூலனூருக்கு குடிநீர் எடுத்ததை தொடர்ந்து புதுப்பை பகுதி பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் வட்டாட்சியரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் தாலுக்கா மூலனூருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வெள்ளகோவில் அடுத்த புதுப்பை பகுதியில் பாயும் அமராவதி ஆற்றில் முறைகேடாக அரசின் எந்தவொரு ஒப்புதலும்,

இன்றி கிணறு அமைக்கும் பணி துவங்கியுள்ளனர். இதனால் வெள்ளகோவில் ஒன்றியம் பகுதிக்கும், நகர பகுதிக்கும் விநியோகிக்க கூடிய தண்ணீருக்கு தட்டுபாடுஏற்படும் வாய்ப்புள்ளது. இதே பகுதியில் கிணறு அமைக்கும் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இதனால் பல்லாயிரம் குடும்பங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே வெள்ளகோவில் பகுதிக்காக தோண்டப்பட்ட கிணறு சுமார் 7 அடி இருக்கும் பட்சத்தில் தற்போது தண்ணீர் தேவைக்காக சுமார் 3 இடங்களில் அளவுகள் செய்யும் பணியும் நேற்று காலை முதல் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த கிணறு இருக்கும் பகுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த வாரத்தில் பண்படங்கு சக்திவாய்ந்த வேட்டுகள் வைத்து சுமார் 40 அடி அகலத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் எடுக்க முயற்சி செய்ததை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனியார் நிறுவனத்தினத்தினரும் அவர்களுக்கு உறுதுணையாகவும் அரசு அதிகாரிகளும் இன்று திடீரென வெள்ளகோவில் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கிணறு அருகே எவ்வித அனுமதியும் இன்றி நேற்று காலை முதல் ஆற்றில் அளவுகள் எடுக்கப்பட்டு மூன்று இடங்களில் கிணறுகள் வெட்டப்படுவதாகவும் இதற்க்கு புதுப்பை ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும் பணிகளை துவங்கி உள்ளனர்.

இதை அறிந்த பொதுமக்கள் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்ஷன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூலனூர் வெள்ளகோவில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து வெள்ளகோவில் போலிசாருக்கும், தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாஷ் மற்றும் தாராபுரம் வட்டாச்சியர் கோவிந்தசாமி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

மேலும் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகளை கிணறு வெட்டிய இடத்திற்கு அழைத்து சென்றனர். சுமார் 7 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தோண்டப்பட்ட குழிகளை மூடினாள் மட்டுமே இந்த ஆற்றைவிட்டு வெளியேறுவோம் என வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குழி தோண்டிய இடத்திலேயே அமர்ந்து கொண்டார் இதனால் பதற்றம் நிலவியது.

பின்னர் இரவு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அமராவதி ஆற்றில் முறைகேடாக தோண்டப்பட்டது கிணற்றை மூடுவதாக உறுதியளித்தனர். மேலும் கிணறுகள் அமைக்க எடுத்து வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றனர். தனியார் கிணறுகள் வெட்டியதை மூடினாள் மட்டும் போதுமா எவ்வித அறிவிப்பு ஆணைகளும் இல்லாமல்,

யார் வேண்டுமானாலும் ஆற்றில் இருந்து நீரை எடுத்து செல்ல கிணறுகள் வெட்டுவதோ அல்லது குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா பொதுமக்கள் போராடினால் மட்டும் தான் சம்பவ இடத்திற்கு வந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story