செல்போனை திருடி சென்ற நபர் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

செல்போனை திருடி சென்ற நபர் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

வேலூரில் பகல் நேரத்தில் நைசாக பேசி பெண்ணிடம் செல்போனை திருடி சென்ற நபரின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. 

வேலூரில் பகல் நேரத்தில் நைசாக பேசி பெண்ணிடம் செல்போனை திருடி சென்ற நபரின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட ஆரணி சாலையில் கவியரசன் என்பவர் சொந்தமாக கணேஷ் மொபைல் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இங்கு ரேணுகா என்ற பெண் பணி செய்து வருகிறார். வழக்கம் போல கடை நேற்று (20.03.2024) செயல்பட்டு வந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர் தனது மொபைலில் டச் ஸ்கிரீன் உடைந்து விட்டது.அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு அந்தப் பெண் 1700 ரூபாய் ஆகும். ஆனால் சிறிது காலதாமதம் ஆகும் என்றும் கூறியுள்ளார். பின்னர் அந்த வாடிக்கையாளர் கடையின் விசிட்டிங் கார்டு வாங்கிக்கொண்டு மீண்டும் வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்த அந்த நபர் எனது வாகனம் பழுதாகி உள்ளது. அதை படம் எடுத்து மெக்கானிக்கிற்கு அனுப்ப வேண்டும் என கூறி கடையில் பணியாற்றி வரும் பெண்ணிடம் இருந்த மொபைல் போனை வாங்கி சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் வராத நிலையில், பெண் செல்போனுக்கு கால் செய்துள்ளார். அப்போது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் இன்று (21.03.2024) வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Tags

Next Story