கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவர் அதிரடி கைது
காவல் ஆணையர் அலுவலகம்
நெல்லை அருகே பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை சீதபற்பநல்லூரை சேர்ந்த பவானி கருவநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிகிறார். இவர் கடந்த 7ம் தேதி துலுக்கர்குளம் கீழ தெருவில் உள்ள மக்களுக்கு பூத் சிலிப்பை கொடுத்தபோது அங்கு வந்த சுப்பிரமணியன் பவானியிடம் தகராறில் ஈடுபட்டு பூத் சிலிப்பை பிடுங்கி கீழே வீசி கையால் தாக்கியுள்ளார். இதுகுறித்து பவானி அளித்த புகாரின் பேரில் மாநகர போலீசார் சுப்பிரமணியனை நேற்று (ஏப்.8) கைது செய்தனர்.
Next Story