நாகை: ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது

நாகை:  ஊராட்சி செயலரை தாக்கியவர் கைது

கோப்பு படம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஊராட்சி செயலரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரபாகரன் (48).இவர் காரையூர் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார்.

அதே ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருபவர் பூசலங்குடி மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் வெங்கடாசலம் (வயது 52).இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் பிரபாகரன் ஊராட்சி பகுதிகளை பார்வையிட்டுள்ளார் அப்போது குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே குடிநீர் வீணாகிறது உள்ளது.அதனை கண்ட பிரபாகரன் வெங்கடாசலத்திடம் குடிநீர் ஆங்காங்கே வீணாகிறது அதனை பார்த்துக்கொள்ள மாட்டாயா என கேள்வி கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் பிரபாகரனை ஆபாசமாக திட்டி கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விட்டு தப்பி சென்றுள்ளார்.இதில் காயம் அடைந்த பிரபாகரன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக பெற்று வருகிறார். இது தொடர்பாக பிரபாகரன் திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வெங்கடாசலம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story