நீதிமன்றத்தில் ஆஜாராகாதவர் அதிரடி கைது
காவல் நிலையம்
முக்கூடல் அருகே அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சிவலார்குளத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்தார்.அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை தொடர்ந்து நேற்று சதிஷை முக்கூடல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags
Next Story