மயங்கி விழுந்தவர் பலி
மயங்கி விழுந்தவர் பலி
காஞ்சிபுரத்தில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி பலி.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுச்செட்டிச்சத்திரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கமலா, 50. இவரது கணவர் பெருமாள், 55. கூலித்தொழிலாளி. இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஒலிமுகமதுபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. கணவரின் இறப்பு குறித்து, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசில் கமலா புகார் அளித்துள்ளார்.
Next Story