பெரியப்பாவை கொன்று எரித்தவர் போலீசில் சரண்

வத்திராயிருப்பில் சொத்து பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் பெரியப்பாவை வெட்டி கொன்று எரித்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராதா (65). இவருக்கும் இவரின் தம்பி சக்கரை செல்வத்தின் மகன் கர்ணன் (27) இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. பின்னர் ஊரில் உள்ள பெரியவர்கள் மூலம் சொத்து பிரச்சனை தீர்க்கப்பட்டு கர்ணன் அவருக்கு வழங்கப்பட்ட இடத்தில் புதிதாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார் .

இந்த நிலையில் ராதாவும் அவரின் தம்பி மகன் கர்ணனும் வத்திராயிருப்பு அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம் வெங்கட்டையாபுரம் செல்லும் சாலையில் உள்ள தென்னந்தோப்பில் இருவரும் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாய்தகறாறு முற்றிய நிலையில் கர்ணன் தான் வைத்திருந்த அறிவாளால் பெரியப்பா ராதாவை வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ராதாவின் உடலை அருகே குவிக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைக்குள் உடலை வைத்து எரித்துவிட்டு கர்ணன் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு போலீசார் எரிந்து கிடந்த ராதாவின் உடலை கைப்பற்றினர்.பின்னர் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக உடலை கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயேவும் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இரவு முழுவதும் இறந்த ராதாவின் உடல் எறிந்த இடத்திலேயே வைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் நாளை உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story