கடையநல்லூரில் கட்டிடத்தின் மேல் ஏறி மிரட்டல் விடுத்தவர் மீட்பு
கட்டிடத்தின் மேல் ஏறி நின்று மிரட்டல் விடுத்த அவரை தீயணைப்புத் துறையினர் மீட்கபட்டார்.
தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் இவர் தனது வீட்டில் சொத்து பிரச்சனை காரணமாக மது போதையில் கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட இருசக்கர வாகனம் நிறுத்தும் கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டினார்.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கடையநல்லூர் போலீசார் கட்டிடத்தின் மேல் நின்ற நபரை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர். இதனால் கடையநல்லூர் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story