தேவாரத்தில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கோப்பு படம்
தேவாரத்தில் பெண் உள்பட இருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவாரத்தில் பெண் உள்பட இருவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம், தேவாரம் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் முருகன் மனைவி செல்வி (43). இவர் குளித்துவிட்டு வீட்டு முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தார்.
அதே தெருவைச் சேர்ந்த கோபால் மகன் மணிகண்டன் (30), ஆண்கள் வரும்போது முடியை அவிழ்த்து விட்டு தலை வாரலாமா எனத் தகராறு செய்து செல்வியையும், இதைத் தடுக்க வந்த ஜக்கையாவையும் தாக்கிக் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Next Story