போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
கைது
தருமபுரி மாவட்டம், அரூர் போலீஸ் ஸ்டேஷன் மீது, பெட்ரோல் குண்டு வீசப் போவதாக, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தருமபுரி கலெக்டர் அலுவலக அவசர உதவி எண்,1077க்கு மொபைல் போனிலிருந்து மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த தகவலின்படி, கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த பறையப்பட்டியை சேர்ந்த பிரபாகரன்,33., என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story