பள்ளபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

பள்ளபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

காவல் நிலையம் 

பள்ளபாளையத்தில், கோவில் அருகே பேசிக் கொண்டிருந்த இருவரை, தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்யப்பட்டார்.

பள்ளபாளையத்தில் கோவில் அருகே பேசிக் கொண்டிருந்த இருவரை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த ஒருவர் கைது.இருவர் தலைமறைவு. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மகன் ஹரிஹரன்.

இவர் ஜனவரி 17ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த ஐயா கண்ணு மகன் செல்வராஜ் வயது 41 என்பவர் ஹரிஹரனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த பள்ளபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன், மோகன், ரகுநாத் ஆகிய மூன்று பேரும் ஹரிஹரன் மற்றும் செல்வராஜை தன்னிச்சையாக சென்று, தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, பின்னர் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவத்தில் ஹரிஹரனுக்கு முதுகு தோல்பட்டையிலும், செல்வராஜுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட்டது. இதில் ஹரிகரன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக ரகுநாத்தை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள மணிகண்டன் மற்றும் மோகன் ஆகியோரை தேடி வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

Tags

Next Story