கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது-வாகனங்கள் பறிமுதல்

கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் அரசி கடத்தலில் ஈடுபடுவார்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது உக்கடம்-செல்வபுரம் பிரதான சாலையில் பாலாஜி நகர் பகுதியில் TNB 3609 என்ற பதிவு எண் கொண்ட லாரி மற்றும் TN41-AT 2928 என்ற பதிவு எண் கொண்ட இரு கார்களில் ரேசன் அரிசி ஏற்றி கொண்டிருந்த அபி(எ)அபிப் ரகுமானை பிடித்து குடிமை பொருள் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் உக்கடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரள மாநிலத்தில் கள்ள சந்தையில் விற்க கொண்டு செல்லபட இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரேசன் அரிசி கடத்த உபயோகப்படுத்தபட்ட லாரி மற்றும் இரு கார்களை கைபற்றிய போலீசார் 2200 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இதனை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டார்.

Tags

Next Story