கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்ட தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அரசு தோட்டக்கலை பண்ணை தொழிலாளர்களின் குறைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தின் நீல மலை தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில்' இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் பொதுச்செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். தலைவர் வித்யா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இதனிடையே திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில்இதனால் கோட்டை மெயின்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் பொதுச்செயலாளர் நல்லமுத்து, 208 பெண்கள் உள்பட 250பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story