வாணியம்பாடி அருகே அம்மா பூங்கா மது கூடாரமாக மாறிவரும் அவலநிலை!

வாணியம்பாடி அருகே அம்மா பூங்கா மது கூடாரமாக மாறிவரும் அவலநிலை!

வாணியம்பாடி அருகே அம்மா பூங்கா சமூக விரோதிகளின் மது கூடாரமாக மாறிவரும் அவலநிலை தொடர்கிறது.

வாணியம்பாடி அருகே அம்மா பூங்கா சமூக விரோதிகளின் மது கூடாரமாக மாறிவரும் அவலநிலை தொடர்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம் பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள அம்மா பூங்கா இப்போது சமூக விரோதிகளின் மது கூடாரமாக மாறிவரும் அவலநிலை! பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வளையம்பட்டு ஊராட்சி. பகுதியில் கடந்த அதிமுக ஆட்சியில் சிறுவர்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா கட்டப்பட்டுள்ளது இந்த பூங்கா அமைக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த பூங்காவில் வாயிற் கதவை உடைத்து விட்டு சமூக விரோதிகள் சிலர் பூங்காவினை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும், உடற்பயிற்சி கூடத்தில் இருந்த அனைத்து உபகரணங்களும் தற்போது துருப்பிடித்து காணப்படுவதாகவும்,பொதுமக்கள் குற்றாசாட்டு முன் வைக்கின்றனர் இந்த பூங்காவனது தற்போது மாட்டு கொட்டையாக சிலர் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த இடத்தை மது அருந்துவதற்கும் இன்ன பல சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பூங்காவை மறுசீரமைப்பு செய்து இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி: அசோக் அப்பகுதி இளைஞர்

Tags

Next Story