மின்சாரத் துறையின் அவல நிலை!

மின்சாரத் துறையின் அவல நிலை!

 நாட்றம்பள்ளி அருகே மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு உண்டாவதை தடுக்க, கல்லை கட்டி தொங்கவிட்டு விஞ்ஞான மூலையை வெளிப்படுத்தியுள்ளனர் கிராம மக்கள்.

நாட்றம்பள்ளி அருகே மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு உண்டாவதை தடுக்க, கல்லை கட்டி தொங்கவிட்டு விஞ்ஞான மூலையை வெளிப்படுத்தியுள்ளனர் கிராம மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கல்லை கட்டி தொங்கவிட்டு விஞ்ஞான மூலையை வெளிப்படுத்திய கிராமத்து மக்கள் மின்சாரத் துறையின் அவல நிலை. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி கொலக்கொட்டாய் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு சில சமயைங்களில் இரண்டு நாட்கள் ஆனாலும் கூட மின்சாரம் துண்டிக்கப்பட்ட அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்சார துறையில் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் மெத்தனப் போக்காக கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் வேறு வழியின்றி மின் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் போதே உயிரை பணையம் வைத்து அந்த கிராமத்து மக்கள் ஆங்காங்கே கற்களை கட்டி கம்பிகளில் தொங்கவிட்டு வைத்துள்ளனர். இதனால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மின்சாரம் தடை இன்றி வரும் அளவிற்கு கிராமத்து மக்களின் விஞ்ஞான முறை வழிபட்டாலும் மின்சாரத் துறையின் அவல நிலையை என்ன சொல்வது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து சொல்கின்றனர்.

Tags

Next Story