விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தென்காசி மாவட்டத்தில் விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் எலந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துப்பாண்டி வயது 60. முத்துப்பாண்டி வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்க நிலையில் இருந்தார். மயங்க நிலையில் இருந்த விவசாயி முத்துப்பாண்டியை அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து பணவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story