மாணவா் கடத்தப்பட்டதாக பரவிய போலி வீடியோவால் பரபரப்பு !
கைது
திண்டுக்கல் வேடசந்தூா் அருகே மாணவா் கடத்தப்பட்டதாக போலி விடியோவை பரப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கூம்பூா் பாம்புலுப்பட்டியைச் சோந்த ரங்கன் மகன் தங்கராஜ் (23). பட்டயப் படிப்பு முடித்த இவா், சில ஆண்டுகளாக கோவையில் பணிபுரிந்தாா். தற்போது சொந்த ஊரில் விடியோ, புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பாம்புலுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் பள்ளிக்குச் செல்லும்போது, வடமாநிலத் தொழிலாளா்கள் கடத்த முயன்றதாக போலியான விடியோவை உருவாக்கி 'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பினாா். இந்தத் தகவல் பரவியதையடுத்து, திண்டுக்கல், கரூா் மாவட்ட போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.அப்போது, தங்கராஜ் மூலம் போலியான விடியோ உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜை போலீஸாா் கைது செய்தனா்.
Next Story