குடிபோதையில் கோவில் கலசத்தை திருடிய நபர் கைது !

குடிபோதையில் கோவில் கலசத்தை திருடிய நபர் கைது !

கைது

குடிபோதையில் கோவில் கலசத்தை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து கலசத்தை மீட்டு உள்ளனர்.
குடிபோதையில் கோவிலில் கலசத்தை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து கலசத்தை மீட்டு உள்ளனர். திருப்பூர் ஊத்துக்குளி சாலை மணியக்காரபாளையம் பிரிவு அருகே ஆவடி நாயகி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பௌர்ணமி பூஜையை முடித்துவிட்டு பூசாரி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்த பொழுது கோவிலின் கர்ப்ப கிரகத்திற்கு மேல் வைக்கப்பட்டு இருந்த இரண்டரை அடி கலசம் காணாமல் போனது தெரிய வந்ததை தொடர்ந்து கோவிலின் நிர்வாகத்தினர் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டதில் ஒரு நபர் கோயிலின் மேல் இருந்த இரண்டரை அடி கலசத்தை திருடி செல்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஊத்துக்குளி சாலையில் கோவிலுக்கு அருகாமையில் சுற்றி திரிந்த நபர் என்பது தெரிய வரவே காவல்துறையினர் அப்பகுதியில் குற்றவாளி குறித்து தேடி வந்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவில் இருந்த நபர் பல்லடம் கணபதி பாளையத்தைச் சேர்ந்த யுகேந்திர பிரசாத் என்பது தெரியவந்ததை தொடர்ந்து வீட்டில் தங்கியிருந்த யுகேந்திர பிரசாத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் குடிபோதையில் கோயிலின் கலசத்தை திருடி விற்க முயன்றதாக கூறினார். அதனை தொடர்ந்து கோயிலின் கலசத்தை திருடிய யுகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டு காவல்துறையால் கலசம் மீட்கப்பட்டுள்ளது.

Tags

Next Story