வீடு புகுந்து கொள்ளை - காவல்துறை விசாரணை
கொள்ளை
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே வீடுபுகுந்து 3¼ பவுன் நகை மற்றும் ரூ.2லட்சம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள சாலைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை மனைவி லீலா புஷ்பம் (60). இவரது கணவர் இறந்துவிட்டார். லீலா புஷ்பம் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு அவர் தூங்கிவிட்டாராம். அப்போது மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து 3¼ பவுன் தங்க நகை மற்றும் ரூ.2லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story