வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த காவல்துறையினர்

வாகன ஓட்டிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த காவல்துறையினர்
 மருத்துவ பரிசோதனை முகாம் 
காரியாபட்டி அருகே தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு இணையாக சாலை விபத்துக்களும், விலை மதிக்க முடியாத மனித உயிர்களும் பலியாவதும் அதிகமாகி வருகிறது. அதிக வேகமாக செல்தல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், முந்தி செல்தல், தூக்கமின்மை போன்றவைகளால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசானது கடந்த 1989 முதல் சாலை பாதுகாப்பு வாரத்தை கடைபிடித்து வருகிறது

. இந்த நிலையில் இந்தாண்டு தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாத விழாக்களில், பல்வேறு விழிப்புணர்வுகளும், அறிவுரைகளும் வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் சோதனை சாவடியில் காவல்துறை சார்பில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் வாகன ஓட்டிகளுக்கு பிரஷர், சுகர், மற்றும் கண் பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிரஷர் அதிகமாக உள்ளவர்களுக்கும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் தூக்கம் வந்தால் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுத்து செல்ல வேண்டும் எனவும், அதிவேகமாக செல்லக்கூடாது எனவும், கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதில் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அருப்புக்கோட்டை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், சார்பு ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story