உயிரிழந்தவரின் படத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

ரயில்வே தண்டவாளத்தை கவன குறைவாக கடக்க முயன்ற போது அடிப்பட்டு உயிரிழந்தவரின் படத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பள்ளிக் குப்பம் பகுதியில், பொதுமக்களிடம் தண்டவாள பாதையை கடக்க கூடாது என்றும் அவ்வாறு கடந்தால் கடந்த 23.10.2023 ஆம் தேதி அன்று தண்டவாள பாதையை சிவக்குமார் என்பவர் அஜாகிரதையாகவும் கவனக்குறைவாகவும் கடக்கும்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 26 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இதை அடுத்து இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி, காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி மற்றும் முதல் நிலை காவலர்கள் சுதர்சன், வாசுகி ஆகியோர் சம்பவ இடத்தில் பொது பொதுமக்களுக்கு பேனர்கள் மூலம் ரயிலில் அடிபட்டவர்களின் புகைப்படத்தை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அருகாமையில் உள்ள கிராமமான ஆவாரங் காடு கிராம மக்களுக்கு தண்டவாள பாதையை கடக்க கூடாது என்றும் அவ்வாறு கடந்தால் சிவக்குமாருக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என்றும் மேலும் அருகாமையில் உள்ள நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகள் தெரியாமல் ஆடு மாடுகளை தண்டவாளப் பாதையில் மேய்ப்பது குற்றம் என்றும் தண்டவாளத்தில் விளையாட்டு தனமாக குழந்தைகள் கற்களை வைப்பது குற்றம் என்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்தினர். இந்தசம்பவத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக காவல்துறையினரை பாராட்டினர்

Tags

Next Story