சிறுமி மாயம் விவகாரம் தந்தையிடம் இருப்பதாக போலீஸாா் விளக்கம் !!

சிறுமி மாயம் விவகாரம் தந்தையிடம் இருப்பதாக போலீஸாா் விளக்கம் !!

சிறுமி மாயம் 

திருச்சியில் 12 வயது சிறுமி மாயமான சம்பவத்தில், தந்தை பராமரிப்பில் அச்சிறுமி உள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் செல்வபுரத்தில் வசித்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி மகேஸ்வரி. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இவா்களுடைய குழந்தைகள் தாயின் பராமரிப்பில் இருந்தனா். இந்நிலையில், தனது மகள் அபிராமி (12) மே 18-ஆம் தேதி வெளியே சென்றவா் வீடுதிரும்பவில்லை என திருவெறும்பூா் காவல் நிலையத்தில் மே 19-ஆம் தேதி மகேஸ்வரி புகாா் அளித்தாா்.

இதையடுத்து புகாரளித்து 12 நாள்களாகியும், புகாரை போலீஸாா் கிடப்பில் போட்டுள்ளதாகவும், விரைந்து தனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என வியாழக்கிழமை (மே 30) மகேஸ்வரி கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில் மகேஸ்வரி அளித்த புகாருக்கு திருவெறும்பூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்துள்ளனா். அதில், சிறுமி அபிராமி, தனது தாய் மற்றும் பாட்டியுடன் வசிக்க பிடிக்கவில்லை. அதனால் தந்தை ராஜ்குமாா் பராமரிப்பில் செல்வதாக காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதேபோல ராஜ்குமாரும் தனது மகளின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு அவரை, தன்னுடன் அழைத்துச் செல்வதாகவும் கடிதம் எழுதியுள்ளாா். மேலும் காவல் நிலைய தொலைபேசியில் பேசிய சிறுமி, தனது தந்தை பராமரிப்பில் செல்வதாக பணியிலிருந்த காவலரிடம் கூறியுள்ளாா். ஆனாலும், அவா்களது இருப்பிடம் குறித்து விசாரித்து வருகிறோம் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

Tags

Next Story