பாத யாத்திரை பக்தர்களுக்கு ஔிரும் ஸ்டிக்கர்கள் வழங்கிய போலீசார்
ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி, பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இரவு நேரங்களில் சாலையோரம் நடந்து செல்லும் போது விபத்து நடக்க வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவு படி, அறச்சலூர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்கண்ணா தலைமையிலான போலீசார், தலவுமலை பகுதி வழியாக செல்லும் முருக பக்தர்களின் உடைகளில், இரவு நேரத்தில் ஔிரக்கூடிய ஸ்டக்கர்களை ஒட்டியதோடு, பாதுகாப்பாக செல்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அவர்கள் அனைவருக்கும் தேவையான ஒளிரும் பட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.