பேருந்தில் இருந்து தவறி விழுத்த டிராவல் பேக்கை உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த டிராவல் பேக்கை உரியவரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.
புதுக்கோட்டை மாவட்டம் சுல்லனி கிராமத்தைச் சேர்ந்த நாடி முத்து மகன் முருகையன் இவர், பிப்.12ம் தேதி சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து சென்னையிலிருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்தில் பயணிக்கும் போது அவரது டிராவல் பேக் வரும் வழியில் தவறி விழுந்துவிட்டது என திருச்சி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பணி புரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து பிப்ரவரி 12ஆம் தேதி காலை ஏழு மணிக்கு ஆலத்தூர் கருவூல பணி முடித்துவிட்டு வரும்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் இருந்து டிராவல் பேக் ஒன்று காரை பிரிவு ரோட்டில் தவறி கீழே விழுந்து கிடந்ததை எடுத்து பாடாலூர் காவல் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மூலம் ஒப்படைத்துள்ளார். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவுபடி, பாடாலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் , முருகையனை பாடாலூர் காவல் நிலையம் வரவழைத்து, பேருந்து ஓட்டுனர் நந்தகுமார் நடத்துனர் கருணாகரன் ஆகியோரின் முன்னிலையில் முருகையனிடம் டிராவல் பேக்கை ஒப்படைத்தனர். இதனை அடுத்து பேக் உரிமையாளர் முருகையன் போலீசாருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Next Story