தொலைந்த செல்போனை 30 நிமிடத்தில் மீட்ட போலீசார்
தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூர் பகுதியில் தொலைந்த செல்போனை உரிமையாளரிடம் 30 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூரை சேர்ந்த துரைராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது அவரது செல்போன் கீழே தவறி விழுந்து தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். விரைந்து சென்ற ஆய்வாளர் ராஜா அறிவுறுத்தலின் பேரில் எஸ்ஐ முருகேஸ்வரி மற்றும் காவலர் ராஜா தொலைந்த செல்போனை அப்பகுதிகளில் ஆய்வு செய்து 30 நிமிடத்திற்குள் தொலைந்த செல்போனை மீட்டு ஆய்வாளர் முன்னிலையில் செல்போன் உரிய நபரிடம் ஒப்படைத்தனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காவல்துறையே வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story