பண மோசடி செய்தர்களிடமிருந்து பணத்தை மீட்ட உரியவரிடம் ஒப்படைத்த போலீசார் !

பண மோசடி செய்தர்களிடமிருந்து பணத்தை மீட்ட உரியவரிடம் ஒப்படைத்த போலீசார் !

பணம் ஒப்படைப்பு 

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூபாய் 4 லட்சம் மோசடி செய்த கும்பலின் வங்கி கணக்கை முடக்கி, பணத்தை மீட்டு உரியவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட சைபர் குற்ற காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூபாய் 4 லட்சம் மோசடி செய்த கும்பலின் வங்கி கணக்கை முடக்கி, பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட சைபர் குற்ற காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா மற்றும் அன்புமதி ஆகியோரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி தலா 2 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றியதையடுத்து, இது தொடர்பாக காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில்.புகாரைப் பெற்ற சைபர் கிரைம் போலீசார் இதில் தொடர்புடைய குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, மனுதாரர்கள் 2 பேர் இழந்த பணம் மொத்தம் ரூ.4,00,000 த்தை மீட்டு உரியவர்களிடம் சைபர் குற்ற காவல்துறையினர் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கயல்விழி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மனோஜ், தலைமை காவலர்கள் சுரேஷ், சதீஸ் குமார், முதல்நிலை காவலர் கலைமணி காவலர்கள் ரியாஸ் அகமது, முத்துசாமி ஆகியோர்களை மாவட்ட SP பாராட்டினார மேலும் சைபர் குற்றங்களில் பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள் 1930 -என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டால் குற்றவாளியின் வங்கி கணக்கை முடக்கம் செய்யலாம். இதர சைபர் குற்றங்கள் சம்மந்தமாக www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.என காவல்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story