சலூன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு

சலூன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு

வழக்கு

முன்விரோதம் காரணமாக சலூன் கடை உரிமையாளரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள பண்டாரக்காடு பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ்குமார் (33). இவர் குமாரகோவிலில் சலூன் கடை நடத்தி வருகிறார். அவருக்கும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவதினம் இரவு ரெதீஷ்குமார் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு செல்லும் போது கண்ணன் மற்றும் காந்தி, மோகன் ஆகியோர் ரெதீஷ்குமாரை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளனர். அப்போது ஆயுதங்களுடன் ரெதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ரெதீஷ்குமாரை அவரது உறவினர்கள் மீது தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன் உட்பட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story