பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தர்மபுரி மாவட்டத்தில் பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்

தர்மபுரி மாவட்டம் - பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
அரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த, சுதா, 26; (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பெங்களூரில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த காட்டுக்கொட்டாயை சேர்ந்த யோகேஷ், 28; என்பவருக்கு புரோக்கர் மூலம் சுதாவை பெண் கேட்டு, கடந்த, ஜூலை, 2ல், ஜீவா, 52; சின்னசேலம் தமிழரசன், 39; ஜெயஸ்ரீ, 34; ஆகியோர் வந்தனர். அப்போது, செப்டம்பரில் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை, 6 முதல், திருமணம் செய்து கொள்வதாக கூறி சுதாவை யோகேஷ் பல தடவை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், துணி, மோதிரம் வாங்குவதற்கு சுதாவிடம் இருந்து, 30 ஆயிரம் ரூபாயை யோகேஷ் வாங்கியுள்ளார். இந்நிலையில் யோகேஷிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த சுதா இது குறித்து யோகேஷ் வீட்டிற்கு சென்று கேட்ட போது, யோகேஷ், ஜீவா, தமிழரசன், ஜெயஸ்ரீ ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் யோகேஷ் உள்பட, 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story