தப்பி ஓடிய கைதி அவரது மனைவின் மீது போலீசார் வழக்கு பதிவு !
கைதி
தூத்துக்குடியில் பெண் காவலர் மீது மிளகாய் பொடி தூவி தப்பிச் சென்ற கைதி ஐகோர்ட் மகாராஜா மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சுந்தரவேல் புரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா இவர் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது ஐகோர்ட் மகாராஜா தற்போது பேருருணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக வழக்கு விசாரணைக்காக பேரூரணி சிறையில் இருந்த கைதி ஐகோர்ட் மகாராஜாவை பெண் காவலர் உள்ளிட்ட இரண்டு ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் விளாத்திகுளம் நீதிமன்றத்திற்கு நேற்று காலை அழைத்துச் சென்றுள்ளனர் பின்பு விளாத்திகுளம் நீதிமன்றத்தில் கைதி ஐகோர்ட் மஹாராஜாவை ஆஜர் படித்திவிட்டு விளாத்திகுளத்தில் இருந்து பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர் அப்போது பேருந்தில் ஐகோர்ட் மகாராஜா உடன் அவரது மனைவி பிரியதர்ஷினி மற்றும் மற்றொரு நபர் வந்ததாக கூறப்படுகிறது இந்த நபர்கள் காவல்துறைக்கு தெரியாமல் ஐகோர்ட் மகாராஜாவிடம் மிளகாய்ப்பொடி பாக்கெட்டை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தவுடன் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக மினி பேருந்தில் ஏறுவதற்காக காவல்துறையினர் கைதி ஐகோர்ட் மகாராஜாவை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பெண் காவலரின் முகத்தில் தூவி விட்டு மற்றொரு காவலரை தள்ளிவிட்டு ஐகோர்ட் மகாராஜா தப்பி ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி தப்பி ஓடிய கைதி ஐகோர்ட் மகாராஜாவை தேடி வருகின்றனர். இந்நிலையில் கைதி ஐகோர்ட் மகாராஜா மனைவி பிரியதர்ஷினி மற்றும் மற்றொரு நபர் ஆகியோருடன் சேர்ந்து பேருந்தில் வரும்போது தப்பி ஓட திட்டம் போட்டு காவல்துறையினர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி கைதி ஐகோர்ட் மகாராஜா தனது மனைவி பிரியதர்ஷினி உடன் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் தப்பி ஓடிய கைதி ஐகோர்ட் மகாராஜா மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி அவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு நபராகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story