போட்டி போட்டு கோசம் இட்டு கொண்ட வாக்குச்சாவடி முகவர்கள்

போட்டி போட்டு கோசம் இட்டு கொண்ட வாக்குச்சாவடி முகவர்கள்

மதுரை வாக்குச்சாவடி மையத்திற்குள் போட்டி போட்டு கோசம் இட்டு கொண்ட வாக்குச்சாவடி முகவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


மதுரை வாக்குச்சாவடி மையத்திற்குள் போட்டி போட்டு கோசம் இட்டு கொண்ட வாக்குச்சாவடி முகவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரியில் காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வரக்கூடிய நிலையில் தொடர்ந்து முதல் சுற்றும் முதலாகவே திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முன்னணியில் உள்ளார் நான்காவது சுற்றில் இருந்து பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக வாக்குகள் பெற்று தற்போது உள்ள 13 வது சுற்று வரை தொடர்ந்து முன்னணியில் உள்ள நிலையில் வாக்கு என்னும் மையத்தை விட்டு வந்த வாக்குச்சாவடி முகவர்கள் தளபதி ஸ்டாலின் வாழ்க கலைஞர் வாழ்க என திமுக முகவர்கள் ஒரு புறம் கோஷமிட மறுபுறம் எடப்பாடி யார் வாழ்க மருத்துவர் சரவணன் வாழ்க என அதிமுக முகவர்கள் போட்டி போட்டு கோஷமிட அந்த வழியாக வந்த அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சிரித்துக்கொண்டே அவர்களை கடந்து சென்ற போது அதில் ஒரு முகவர் வருங்கால மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் என கோஷமிட்ட அதெல்லாம் வேண்டாம்பா என்கின்ற வகையில் கையை அசைத்தவரே அங்கிருந்து சென்றார் வேட்பாளர் சரவணன்.

இவர்களுக்கிடையே மதுரை நாடாளுமன்ற தேர்தலில் தற்போது இரண்டாவது இடத்தில் முன்னிலையில் உள்ள பேராசிரியர் ராம சீனிவாசனின் பாஜக முகவர்கள் மோடி மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கோஷமிட பாதுகாப்புத் துறையில் இருந்த காவலர்கள் செய்வதறியாத திகைத்து நின்றனர் சற்று நேரத்தில் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவ மெல்ல ஒவ்வொரு கட்சி முகவர்களையும் அவர்கள் வெளியில் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Next Story