சாலை வசதி இல்லாத பகுதி மலை கிராம பகுதிகளுக்கு குதிரையில் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்ட குரங்கணி மலை கிராமத்தில் இருந்து சுமார் 7கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷன், முதுவாக்குடி, சென்ட்ரல், போன்ற பகுதிகளுக்கு இன்னும் முறையான சாலை வசதி இல்லை இதில் ஊரணி, ஊத்துக்காடு, முதுவாக்குடி போன்ற பகுதிகளுக்கும் குதிரை மூலம் வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகாரணங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இப்பகுதியில் முழுவதும் ஏலக்காய் மிளகு காப்பி போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றது.
இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . ஒவ்வொரு தேர்தலுக்கும் குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷன் முதுவாக்குடி சென்ட்ரல் போன்ற பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் கோவேறு கழுதைகள் மூலமும் வாக்குப் பெட்டிகள் வாக்கு பதிவிற்கான உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் இப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் கிராம மக்கள் மற்றும் ஆதிவாழ் பழங்குடியின மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக குரங்கணியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவு வரை வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்கு பதிவிற்கான உபகரணங்கள் குதிரைகளில் கொண்டுசெல்லப்பட்டது.
இதற்காக போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இவிஎம் மிஷின்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கான உபகரணங்கள் மலை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது. குரங்கணி வரை வாகனங்களில் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பின்பு அங்கிருந்து குதிரை மூலம் கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.