ஜீவசமாதிக்கு முயற்சித்த சாமியார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
சிவகங்கையில் ஜீவசமாதி அடைய அடைத்து வைக்கப்பட்ட நிலையில், சாமியார் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கையில் ஜீவசமாதி அடைய அடைத்து வைக்கப்பட்ட நிலையில், சாமியார் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு சாமியார் மடத்தில் சாமியார் ஒருவரை உடல் நலவு குறைவு ஏற்பட்டும், அவருக்கு எந்த ஒரு மருத்துவ உதவியும் செய்யாமல் ஜீவசமாதி அடைய செய்யும் நோக்கில் அவரை அடைத்து வைத்துள்ளதாக அருகில் உள்ளவர்கள் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் நகர் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் அங்கு சென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருந்த சாமியாரை மீட்டு 108 வாகனம் மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags
Next Story