கொப்பரைத் தேங்காய்க்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் !!

கொப்பரைத் தேங்காய்க்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் !!

கொப்பரைத் தேங்காய்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழக ஏரி மற்றும் ஆற் றுப் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் தஞ்சாவூரில் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தஞ்சாவூர் ஒன்றிய அமைப்பாளர் முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ், பூதலூர் ஒன்றிய மகளிர் அணி விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், "காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியும் சம்பா சாகுபடியும் உரிய காவிரி நீர் கிடைக்காமல் அழிந்து வருகிறது.

2023ம் ஆண்டின் சம்பா சாகுபடியான 9 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா வழங்காமல் வஞ்சித்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டியே தீருவேன் என கூறி வரும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோரை கண்டித்து வரும் ஜூன் 13ம் தேதி சென்னை தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதபோராட்டம் நடத்த உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆழ் துளை கிணறு பம்பு செட்டுகளை கொண்டு குறுவை சாகுபடி தொடங்கி இருக்கும் விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சர் பகலில் பத்து மணி நேரமும் இரவில் 10 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்கவும் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து உதவிட வேண்டும். பட்டுக்கோட்டை பேராவூரணி ஒரத்தநாடு போன்ற தாலுகாவில் தென்னை சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்க கொப்பரை தேங்காய் விலை உயர்த்தி அறிவிக்க வேண்டும். இலவச தென்னங்கன்றும், இலவசமாக இடு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கிளை வாய்க்கால்கள் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி புனரமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கும் முன்பாகவும் சம்பா சாகுபடிக்கு முன்பாகவும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

விவசாயிகளின் இலவச விவசாய மின்சாரத்திற்கு ஆபத்தாக நிற்கக்கூடிய மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். வீட்டு மின்சாரத்தை பயன்படுத்தக் கூடிய விவசாயிகளும் பொதுமக்களும் கஷ்டத்தில் இருந்து விடுபட மாதம் மாதம் மின் கட்டணம் வசூல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

காவிரி டெல்டா ஆற்று பயிரான பருத்தி, மக்காச்சோளம் பயிர்கள் தொடர்ந்து பெய்த மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் ஆட்களை விவசாய பணிகளுக்கு பஞ்சாயத்து மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story