நாட்டு முருங்கைக்காய் விலை கிடு கிடு... கிலோ ரூ.100க்கு விற்பனை

நாட்டு முருங்கைக்காய் விலை கிடு கிடு... கிலோ ரூ.100க்கு விற்பனை
நாட்டு முருங்கைக்காய் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்று கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.
நாட்டு முருங்கைக்காய் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்று கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சேலம் நாட்டு முருங்கைக்காய் சீசன் முடிவடைந்துள்ளதால், மார்கெட்டிற்கு வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

சீசன் காலங்களில் நாள்தோறும் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், ஆத்தூர், தம்மம்பட்டி உழவர் சந்தை வாரச்சந்தைகளுக்கு 150 டன் நாட்டுமுருங்கை காய்கள் விற்பனை வரும். தற்போது சீசன் முடிந்துவிட்ட நிலையில், மிகவும் குறைவாக வருகிறது. இதனால், தேவை அதிகரித்து முருங்கைக்காய் விலைஉயர்ந்துள்ளது. நேற்று, ஆத்தூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 100 ரூபாய்க்கும், ஒருகாய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. காய்கறி கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் 120 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கு விற்பனையானது.

இதுகுறித்து, உழவர் சந்தை விவசாயி கூறியதாவது: தற்போது சீசன் முடிந்து, மரங்கள் பூக்கத்துவங்கியள்ளன. மாவட்டத்தில்ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூர், வாழப்பாடி பகுதிகளிலிருந்த நாட்டு முருங்கைக் காய்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது 50 கிலோ முதல் 100 கிலோ அளவில் தான்வரத்து இருக்கிறது. இதுவே சீசன் காலங்களில் 150 டன் முதல் 200 டன் வரும். தேவை அதிகரித்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story