தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

குமரி மாவட்டத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கு விற்பனையானது.

குமரி மாவட்டத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கு விற்பனையானது.

குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர், கோலியான்குளம் மற்றும் மதுரை, ஊட்டி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு பூக்கள் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் வரத்து பனிப்பொழிவு காரணமாக குறைந்து இருந்தது. இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000-க்கு கீழ் விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு இன்று மார்க்கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. மல்லிகைப்பூ கிலோ ரூ.1800-க்கும், பிச்சிப்பூ ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சேலம் அரளி ரூ.230, தோவாளை அரளி ரூ.200, வாடாமல்லி ரூ.80, கோழிப்பூ ரூ.60, மஞ்சள் சிவந்தி ரூ.130, சம்பங்கி ரூ. 170, மஞ்சள் கேந்தி ரூ.70, சிவப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்கப்பட்டது. தாமரை பூ ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story