வெளிநாட்டு வகை காய்கறிகளின் விலை கடும் உயர்வு

வெளிநாட்டு வகை காய்கறிகளின் விலை கடும் உயர்வு

மார்த்தாண்டம் மார்க்கெட்டில் வெளிநாட்டு வகை காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


மார்த்தாண்டம் மார்க்கெட்டில் வெளிநாட்டு வகை காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மார்த்தாண்டம் மார்க்கெட் செவ்வாய் மற்றும் வெள் ளிக்கிழமைகளில் கூடுகிறது, ஆனால் தினசரி இங்கு காய் கறி மற்றும் பழ வகைகள் கிடைக்கும் என்ற பெருமை உண்டு. தற்போது திருமணம் சீசன் என்பதால் ஏராளமானோர் வாகனங்களில் வந்து காய்கறி வாங்கி செல்கின்ற னர். தற்பொழுது விலையும் ஓரளவு நியாயமாக உள் ளது. இந்த மார்க்கெட்டில் வெள்ளரிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் தாராளமாக கிடைக்கிறது.இந்த நிலையில் தற்போது வெளிநாட்டு காய்கறிகளும் தாராளமாக கிடைக்கிறது.

இவற்றின் விலை தற் போது அதிகரித்துள்ளது. பர்கர், பீசாவிற்கு பயன்ப டுத்தப்படும் ஐஸ் பர்க் ஒரு கிலோ ₹180 ஆக இருந்தது ₹440 ஆக விலை உயர்ந்துள் ளது. பேபிகான் ஒரு பாக் கெட் ₹40 ஆக இருந்தது. ₹70 ஆக விலை உயர்ந்துள்ளது. புரோக்கோலி ₹180 ஆகஇருந்தது. தற்போது ₹360 ஆகவும், கேப்ஸிகம் சிவப்பு மற்றும் மஞ்சள் ஆகியவை₹140 ஆக இருந்தது ₹240 ஆகவும் உயர்ந்துள்ளது. சுமார் இரண்டு மாதமாகபீன்ஸ் ஒரு கிலோ விலை ₹200 ஆக இருந்தது. மழை பெய்து வரும் நிலையில்விலை குறைந்து ₹60 க்கு விற்பனையாகிறது விற்பனை யும் அமோகமாக நடந்து வருகிறது

Tags

Next Story