அதிகரித்தது வெண்டைக்காய் விலை

தலைவாசல் தினசரி மார்க்கெட்டில் வரத்து குறைவால், வெண்டைக்காய் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் தினசரி காய்கறி மார்க்கெட் சுமார் நூறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தலைவாசல் மட்டுமின்றி ஆத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்த காய்கறிகளுக்கு அங்கு அதிக தேவை இருக்கும். இதனால் விற்பனையும் அமோகமாக நடபெறும்அதுமட்டுமின்றி பெங்களுர், ராயக்கோட்டை தருமபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் பனிப்பொழிவு அதிக அளவில் இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது.

இதனால், தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு வெண்டைக்காய் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. வெண்டைக்காய் கொண்டு வரும் விவசாயிகளிடம் போட்டி போட்டு வாங்குவதால் வியாபாரிகளால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களான பூச்சி மருந்து, உரம் விலை கடுமைய உயர்ந்துள்ளது நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது இந்த விலையையும் தினசரி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்தால் இதில் விவசாயிகளோ வியாபாரிகளோ பொதுமக்களோ யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்கின்றனர்.

இதனைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக விவசாயிகளுக்கான காய்கறிகளையும் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து, உரம் போன்ற பொருட்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெண்டைக்காய் விலையைப் பொறுத்தவரையில், சென்னையில் ஒரு கிலோ வெண்டைக்காய் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மற்ற காய்கறிகளின் விலையையும் இங்கே பார்க்கலாம்.

Tags

Next Story