கிடு கிடுவென உயர்ந்த பூஜை பொருட்கள் விலை

கிடு கிடுவென உயர்ந்த பூஜை பொருட்கள் விலை

ஆயுத பூஜை


ஆயுத பூஜை பண்டிகை தற்காலிக கடைகள் அதிகரிப்பு பூஜை பொருட்கள் விலை கிடு கிடு உயர்வு

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் ஏராளமான விசைத்தறிக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது.. மேலும் லேத்து பட்டறைகள் மற்றும் வணிக வர்த்தக கடை நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக பள்ளிபாளையம் உள்ளது.. ஆயுத பூஜை விசேஷ தினத்தை முன்னிட்டு ,பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கடைகளை அலுவலகங்களை சுத்தப்படுத்தி ,ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில், ஆயுத பூஜை தினத்தை ஒட்டி பூக்கள், வாழைக்கன்றுகள்,திருஷ்டி பூசணிக்காய், பொரி விற்பனை செய்யும் கடைகள் கணிசமாக பள்ளிபாளையம் வட்டார பகுதியில் அதிகரித்துள்ளது.

பள்ளிபாளையம் பிரதான சாலையில் அதிகளவு அமைக்கப்பட்ட கடைகள் தற்போது அந்த பகுதி முழுவதும் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், பள்ளிபாளையம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நேரு திடலில் கணிசமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இதுகுறித்து பொரிக்கடை வைத்துள்ள நல்லசாமி என்பவர் கூறும் பொழுது கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு பூஜை பொருட்கள் பூக்கள் மற்றும் பொரி உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.. 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி 600 முதல் 700 ரூபாய் வரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக சாலையோர வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவிற்கான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார்.

Tags

Next Story