வரத்து குறைவால் வெள்ளி மீன்கள் விலை கடும் உயர்வு

வரத்து குறைவால் வெள்ளி மீன்கள் விலை கடும் உயர்வு

வெள்ளி மீன் 

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் வரத்து குறைந்ததால் வெள்ளி மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து 1 கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பிரத்யேக வலைகளை பயன்படுத்தி தொடர்ந்து வெள்ளி மீன்களை மட்டும் பிடித்து வருகின்றனர். இந்த மீன்கள் மழைகாலத்தில் அதிக அளவில் சிக்கும்.

இப்போது எதிர்பாராதவிதமாக வெள்ளி மீன்கள் சில மீனவர் வலையில் சிக்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.150 விற்பனை செய்யப்பட்ட நிலையில் வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்து 1 கிலோ வெள்ளி மீன்கள் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு பிடிப்படும் மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய் யப்படாததால் உள்ளூர் மக்கள் இந்த மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் இந்த மீனுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு வெள்ளிமீன், தேசப்பொடி, வெள்ளைபொடி, பொடிமீன் கேரளாவில் மட்லீஸ் என அழைக்கப்படுகிறது.

Tags

Next Story