காய்கறிகளின் விலை திடீர் குறைவு !

காய்கறிகளின் விலை திடீர் குறைவு !

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் காய்கறிகளின் விலை குறைந்து விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு திண்டுக்கல், தேனி, மதுரை,கரூா்,திருப்பூா், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி பல வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

இங்கு விற்பனையாகும் சுமாா் 70 சதவீத காய்கறிகளை கேரள வியாபாரிகள் மொத்தமாகக் கொள்முதல் செய்கின்றனா். மீதமுள்ள 30 சதவீதம் காய்கறிகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதன்கிழமை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் தக்காளி, பச்சைமிளகாய் திடீரென விலை குறைந்து, விற்பனையானது.

இது குறித்து கடை உரிமையாளா்கள் கூறுகையில், கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதற்கு இன்னும் ஒரிரு நாள்களாகும். இதனால், மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனா்.

Tags

Next Story