தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை சரிவு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை கிலோவிற்கு ரூ.6 சரிந்து விற்பனையானது.
தர்மபுரியில் நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.மேலும் நேற்று அங்காடிக்கு 2,146 கிலோவாக அதிகரித்தது. நேற்று கிலோவிற்கு 6 ரூபாய் குறைந்தது.1 கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ.520- க்கும், குறைந்தபட்சமாக 229 ரூபாய்க்கும், சராசரியாக 411.49- ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 8 ,83,194 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story