தர்மபுரியில் ரயில் நிலைய சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்த பிரதமர்
பணிகள் துவக்கி வைப்பு
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் வகையில் அம்ரி பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தர்மபுரியில் உள்ள ரயில் நிலையம் ரூபாய் 21.34 கோடி மதிப்பீட்டில் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
இத்திட்ட பணிகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தர்மபுரி ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி என் வி செந்தில் குமார் இத்திட்டத்திற்கான பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். தர்மபுரி ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ்,
ரூபாய் 21.34 கோடி மதிப்பீட்டில் ரயில் நிலைய பிரதான நுழைவாயில் மற்றும் முகப்பு மேம்பாடு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன மேலும் ரயில் நிலைய வளாகத்திற்குள் போக்குவரத்து மற்றும் பயணிகளின் நடமாட்டத்தை மேம்படுத்தும் பணிகள் இரண்டாவது வெளியேறும் வாயில் ரயில் நிலைய பிளாட்பார்ம் உயரம் நீட்டிப்பு அகலமான கால் மேல் பாலம் எஸ்கேலேட்டர்கள்
மற்றும் லிப்ட் வசதி மின் விளக்குகள் எல்இடி பெயர் பலகைகள் எல்இடி திரைகள் உள்ளிட்ட மின் மேம்படுத்தும் பணிகள் மற்றும் ரயில் பயணிகளுக்காக தகவல் அறியும் அறிகுறி பலகைகள் ரயில் அறிகுறி பலகைகள் கடிகாரங்கள் மற்றும் பிற அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரயில் பயணிகளின் தேவை மற்றும் வசதியை கருத்தில் கொண்டு பயணிகளையும் தேவைகள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழாவில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி மாது துணைத்தலைவர் நித்தியா அன்பழகன், தர்மபுரி முன்னாள் நகர திமுக செயலாளர் அன்பழகன், பெங்களூரு தென்மேற்கு ரயில்வேவை சேர்ந்த முதுநிலை கோட்ட பொறியாளர் பிரசாத் திரிபாதி, உதவி கோட்ட பொறியாளர் கே.வினாய், உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் ரயில் பயணிகளும் பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.