முதல்வர் குடும்பத்தையே காப்பாற்றியவர் பிரதமர்: ஹெச்.ராஜா பேச்சு
வாக்கு சேகரித்த ராஜா
மதுரை பாஜக பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசனை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மதுரை மானகிரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன பிரச்சாரம் செய்து பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் ஆதரவாக வாக்குகள் சேகரித்தார், பரப்புரையின் போது எச். ராசா பேசியது, தற்போது நடைபெறும் தேர்தல் நேர்மைக்கும் ஊழலுக்கும் உண்டான தேர்தல். செந்தில் பாலாஜி ஜெயிலில் பொன்முடி பெயிலில் உள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் உள்ளார் சோனியா காந்தி பெயிலில் உள்ளார். எதிர்க்கட்சியில் உள்ள கூட்டணியினர் ஜெயிலில் அல்லது பெயிலில் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது நல்லது, ஏனென்றால், தனித்தனியாக தீய சக்திகளை அழிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த தீய சக்திகளையும் நாம் அழித்து விடலாம்.
மதுரையில் உள்ள தண்ணீர் பிரச்சனைகளை வேஸ்ட் வெங்கடேசன் சரி செய்து உள்ளாரா? நேற்று ஆங்கில சேனலில் நடத்திய கருத்துக் கணிப்பில் 412 சீட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வருவது உறுதியாகிவிட்டது. நான் 34 ஆண்டுகளாக பாஜக நிர்வாகியாக இருக்கிறேன் தற்போது வரை தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். மதுரை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன் திறமை மிக்கவர். எனக்கு மகள்களும் பெண் பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள். மாலை நேரங்களில் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்பட்டார்கள் அப்போது கழிவறை திட்டம் கொண்டுவரப்பட்டது.
பெண்களுக்கு பெரும் உதவியாக இலவச கேஸ் சிலிண்டர் திட்டம் கொண்டுவரப்பட்டது. என்ன செய்தார் பிரதமர் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். நீங்கள் உயிரோடு பேசுவதற்கு காரணமே பிரதமர் மோடி தான். கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை கொடுத்து நாட்டை மட்டுமல்ல உங்களையும் காப்பாற்றியவர் பிரதமர் மோடி தான். முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகன் உதவாத நிதிக்கும் தடுப்பூசி கொடுத்தவர் பிரதமர் மோடி.
கொரோனா காலகட்டத்தில் இலவசமாக தடுப்பூசி கொடுத்து மக்களை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அவரைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் வாய் கூசாமல் கேள்வி எழுப்புகிறார். முதலமைச்சர் காலையில் எழுந்தாலே பொய் பேசுவது தான் முதல் வேலை. ஸ்டாலின் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று பேசுகிறார்.
முதலமைச்சரின் தொகுதி கொளத்தூர் எப்போது மழை பெய்தாலும் குளம் போல் தண்ணீர் சேருவதால் அதற்கு பெயர் கொளத்தூர் ஆக உள்ளது. வெள்ள நிவாரண நிதிகளில் மோசடி செய்தவர் முதல்வர் ஸ்டாலின். முதலமைச்சர் மோசடி செய்யலாமா? பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 950 கோடி ரூபாய் வெள்ளம் மழை வெள்ளம் வருவதற்கு முன்னாடியே கொடுக்கப்பட்டது. 950 கோடி என்னாச்சு? அதிமுக திமுகவுடன் டீல் போட்டு சில சீட்டுகள் ஜெயிப்பதற்காக கூட்டணியை பிரித்துள்ளார்கள். இதனால்தான் தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள்.
தாமரைச் சின்னத்தில் நாம் ஓட்டு போடும்போது தேங்க்யூ மோடி என்று ஓட்டு போட வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் தர்மத்தின் பக்கம் நின்று வேஸ்ட் வெங்கடேசனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசனுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.