திண்டிவனம் அருகே தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது
தனியார் பள்ளி முதல்வர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தனியார் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிபடுத்தவே பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவாகியதை நேற்றைய தினம் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து நீதிபதி ஹெர்மிஸ் வருகின்ற 1.02.2024 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட பள்ளியின் முதல்வர் தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.