வழக்கறிஞரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வழக்கறிஞரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முற்றுகை 

திருப்பூரில் ஏலச்சீட்டு மோசடி செய்தவருக்கு ஆதரவாக நோட்டீஸ் வழங்க வந்த வழக்கறிஞரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் நாச்சிபாளையம் முத்துமாரியம்மன் கோவில் 4வது வீதி பகுதியில் வசித்து வருபவர் தங்கம் ( 45 ) மற்றும் ஆர்த்தி (35) தம்பதியினர். இவர்கள் அப்பதியில் கடந்த 4 வருடங்களாக வசித்து வந்துள்ளனர். மேலும் வீரபாண்டி பகுதியில் இவர்களுக்கு சொந்தமாக துணிக்கடை ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பலகார மற்றும் ஏலச் சீட்டு சேர்ந்துள்ளனர்.

சீட்டு முடிந்தவர்களுக்கு பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு மாத காலமாக யாரையும் சீட்டு எடுக்க விடாமலும் , சீட்டு எடுத்தவர்களுக்கு இடத்தை விற்று பணம் தருவதாகவும் கூறிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் வீட்டிற்கு சென்ற போது தங்கம் மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தலைமுறைவானது தெரியவந்தது.

தொடர்ந்து , தங்கம் தரப்பு வழக்கறிஞர் பொதுமக்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என நோட்டீஸ் வழங்க வந்துள்ளார். இதனை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கம் வீட்டு முன்பாக திரண்டு வழக்கறிஞரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story