திருடனை கையும், களவுமாக பிடித்த பொதுமக்கள்

திருடனை கையும், களவுமாக பிடித்த பொதுமக்கள்

 கோவையில் கோவிலில் சிலையை திருட முயன்ற நபரை, கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

கோவையில் கோவிலில் சிலையை திருட முயன்ற நபரை, கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை: சிங்காநல்லூர் எஸ்.ஐ.ஹெச்.ஸ் காலனி மூகாம்பிகை நகர் பகுதி அருகில் அமைந்துள்ளது கருப்பராயன் கோவில்.சம்பவத்தன்று அங்கு பூசாரியாக பணியாற்றும் கணேசன் காலை 8 மணி அளவில் கோவிலுக்குள் வந்த போது சந்தேகபடும் வகையில் இளைஞர் ஒருவர் வெளியேறியதை கண்டுள்ளார்.கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கருவறை சுற்றி இருந்த வேலிகள் சேதப்படுத்தப்பட்டு சிலையில் வேல் மற்றும் பொருட்களைத் திருட முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக சந்தேக படும்படி வெளியேறிய இளைஞரை பிடித்து வைத்து கோவிலின் செயலாளர் ராமசுப்பிரமணியத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.திருட்டு முயற்சி குறுத்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டதில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரிக்கிபாண்டி என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story