ஆபத்தான நிலையில் நின்ற மரத்தை பொதுமக்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்
அறுவனை அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இந்த மரத்தை பொதுமக்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
அறுவனை அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இந்த மரத்தை பொதுமக்கள் வெட்டி அப்புறப்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருமனை ரோட்டோரத்தில் கிலாத்தூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்துவந்தது. நெடுஞ்சாலை துறை மூலம் நடந்த பணி தற்போது பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. வடிகாலுக்காக தோண்டப்பட்ட பகுதி அப்படியே விடப்பட்டு உள்ளதால், தொடர் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, ஓரத்தில் நிற்கும் ரப்பர் மரங்கள் சில ஆபத்தான நிலையில் சரிந்து உள்ளன .ஆனால் சம்பந்தப்பட்ட துறையினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதில், ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் ரோட்டின் குறுக்கே சாய்ந்து நின்றது. இந்நிலையில், அந்த மரத்தை பொதுமக்கள்மின்பாதைக்கு சேதம் ஏற்படாதவாறு வெட்டி அகற்றினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
Next Story