திடீர் கூட்டம் நடத்திய பொதுமக்கள் – காவல்துறை பேச்சுவார்த்தை

திடீர் கூட்டம் நடத்திய பொதுமக்கள் – காவல்துறை பேச்சுவார்த்தை

திடீர் கூட்டம் நடத்திய பொதுமக்கள் 

நாகை மாவட்டம் ,பனங்குடியில் திடீர் அவசர கூட்டம் நடத்த ஒன்று கூடிய பொதுமக்கள் நாகூர் போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

நாகை மாவட்டம் , திருமருகல் ஒன்றியம் , பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் எண்ணை ஆலை நிறுவனம் உள்ளது.ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு 620 ஏக்கர் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியது.நிலம் கையகப்படுத்தியதற்கு 2013 இழப்பீடு சட்டத்தின்படி மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின்படி சாகுபடி தாரர்கள்,கூலி தொழிலாளர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமைதாரர்களுக்கு சிலருக்கு நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நீதிமன்றத்தில் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

விவசாயிகளின் நியாயமான சட்டத்திற்கு உட்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகு சி.பி.சி.எல் நிறுவனம் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள், நில உரிமை தாரர்கள்,சாகுபடி தாரர்கள்,கூலித் தொழிலாளர்கள் அவர்களது வீட்டில் கடந்த மாதம் 12 ஆம் தேதி தேர்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைத்தும் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடங்கி ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சி.பி.சி.எல் நிர்வாகமும் தங்களிடம் எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என அவர்கள் வேதனை அடைந்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 13-ஆம் தேதி அன்று நரிமணம் கிராமத்திலிருந்து தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி சத்தியபிரதா சாஹூக்கு தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அஞ்சல் மூலம் நூற்றுக்கணக்கானோர் கடிதம் அனுப்பி வைத்தனர்.

அதே போல் நேற்று தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி சத்திய பிரதா சாஹூக்கு தேர்தல் புறக்கணிப்பு குறித்த மின்னஞ்சல் அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் நேற்று பி.பனங்குடி கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடி அவசர ஆலோசனை கூட்டம் நடத்த முயன்றனர்.தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு கூடியிருந்த விவசாய கூலி தொழிலாளர்களை கலைந்து செல்லும் படியும் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் கூட்டம் கூடுவது சட்டப்படி தவறு என அங்கு எடுத்து கூறி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.அப்போது தங்களது நான்கு வருட காலமாக வருமானமின்றி வாழ்வாதாரமே போய்விட்டது.எங்கள் கிராமத்தில் நாங்கள் கூடி பேசுவதில் என்ன தவறு இதுவரை எந்த அதிகாரியும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில் தற்போது மட்டும் ஏன் வந்தீர்கள் என அங்கு கிராம மக்களாகிய கூலி தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.

Tags

Next Story