மின் மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் பாதிப்பு

மின் மயானத்திலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் பாதிப்பு

மின் மயானத்தில் இருந்து வெளியேறும் புகை 

திண்டுக்கல் மின் மயானத்தில் இருந்து வெளியாகும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல்லில் மின் மயானத்தில் ஏற்படும் புகை தெருக்களில் பரவி தொற்று நோயை உண்டாக்கி வருகிறது. இதனால் பிணத்தின் புகையால் மனித உடலுக்கு பகை உண்டாகி வருகிறது.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மருதாணி குளம் அருகில் உள்ள மின் மயானத்தில் தற்போது உயிரிழந்தவர்களை எரிக்கின்றனர். இவ்வாறு எரிக்கும் போது வெளியேற்றும் புகை கூண்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சரிவர புகை உயரே செல்லாமல் பாதியிலேயே வெளியேறி பக்கவாட்டில் கிளம்பி விடுகிறது.இதனால் பிணங்கள் எரியும் பொழுது தெருக்களில் அதிக அளவு கரும் புகை வருகிறது. RM காலனி.நேருஜி நகர். மருதாணிகுளம். கோவிந்தாபுரம் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். முதியவர்கள் குழந்தைகள் வீடுகளுக்குள் அமர முடியாமல் சுவாசக் கோளாறால் அவதிப்படுகின்றனர். பலருக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் தொற்று நோய்களும் வேகமாக பரவுகின்றன. வீட்டுக்குள்ளுக்குள் அமர்ந்து உணவுகளை கூட உண்ண முடியாது துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. புகையால் தொடர்ந்து பகை ஏற்படுகிறது. புகை கூண்டை சரி செய்து, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story